ஓட்டமாவடி கல்வி கலாசார நிலையத்தின்மீது தாக்குதல்

0
140

ஓட்டமாவடி, மீராவோடையிலுள்ள ஷியா அமைப்பின் கல்வி கலாசார நிலையத்தின்மீது, இனந்தெரியாத நபர்கள் நேற்று இரவு ( 08 ) மேற்கொண்ட தாக்குதிலில் காயமடைந்த மூவர், வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.


ஓட்டமாவடி மீராவோடை ஆலிம் வீதியில் அமைந்திருந்த ஷியா அமைப்பின் கல்வி கலாசார நிலையம் இஸ்லாமிய அகீதாவிற்கு முரண்பாடான முறையில் கொள்கையினையை பரப்பி வருகின்ற நிலமையை கண்டித்து இனம்தெரியாதோரால் உடைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இத்தாக்குதலில் பெருமளவிலான பொருட்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் மேலும் கூறினார்.

சுமார் நூற்றுக்கு மேற்பட்டோர் தாக்குதலை மேற்கொண்டதாக, அகில இலங்கை அஹ்லுல் பைத் ஜமாத்தின் தலைவர் மௌலவி எல்.ரி.எம்.ஹலீம் தெரிவித்தார்.

குறித்த சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.

ஓட்டமாவடி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com