ஒரு விக்கட்டைக்கூட கைப்பற்ற முடியாமல் தடுமாறும் மலிங்க: ஏமாற்றத்தில் ரசிகர்கள்

0
553
ஒரு விக்கட்டைக்கூட கைப்பற்ற முடியாமல் தடுமாறும் மலிங்க: ஏமாற்றத்தில் ரசிகர்கள்.ஒரு விக்கட்டைக்கூட
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க பெரும் சவால்களை எதிர்நோக்கியுள்ளார்.
நடைபெற்று முடிந்த இரண்டு போட்டிகளிலும், ஒரு விக்கட்டையேனும் மலிங்க கைப்பற்றியிருக்கவில்லை
முதலாவது போட்டியில் 8 ஓவர்கள் பந்துவீசிய மலிங்க, 52 ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். எனினும், ஒரு விக்கட்டையேனும் அவரால் கைப்பற்ற முடியவில்லை.ஒரு விக்கட்டைக்கூட
அடுத்ததாக இரண்டாவது போட்டியிலும் 8 ஓவர்கள் பந்துவீசியிருந்த அவர், 49  ஓட்டங்களைக் கொடுத்திருந்தார். எனினும், அந்தப் போட்டியிலும் ஒரு விக்கட்டைக்கூட அவர் கைப்பற்றியிருக்கவில்லை.
இந்திய தொடருக்கு முன்னதாக 199 போட்டிகளில் பங்கேற்றிருந்த மலிங்க, 298 விக்கட்டுக்களை வீழ்த்தியிருந்தார்.
இந்த நிலையில், இந்திய அணியுடனான முதலாவது போட்டியில், அவருடைய 200 ஆவது போட்டியில் 300 விக்கட்டுக்கள் என்ற இலக்கை அடைவார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அவரால் ஒரு விக்கட்டையேனும் வீழ்த்தியிருக்க முடியவில்லை.ஒரு விக்கட்டைக்கூட
அடுத்ததாக இரண்டாவது போட்டியிருலும், ஒரு விக்கட்டையேனும் கைப்பற்றாமல் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமளித்தார்.
இந்த நிலையில், இன்று நடைபெறும் மூன்றாவது போட்டியிலாவது அவர் 300 விக்கட்டுக்கள் என்ற இலக்கை அடைவாரா என்ற எதிர்ப்பார்ப்புடன் அவரது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
Advertisement