ஒரு மாதத்தில் 260 இணைய குற்ற முறைப்பாடுகள்

0
14
இணைய குற்ற முறைப்பாடுகள்

புதிய ஆண்டியில் ஒரு மாதகாலப்பகுதியில் இணையத்துடன் தொடர்புடைய 260 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

இதனை, இலங்கை கணினி அவசர உதவி பிரிவு தெரிவித்துள்ளது.

அதிகளவான முறைப்பாடுகள், சமூக வலைத்தளங்களுடன் தொடர்புடையவை என்று அந்த அமைப்பின் பாதுகாப்பு பொறியியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வேறு நபர்களின் புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் அதிக முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் தற்போது முடுக்கிவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com