ஐ.நா. தீர்மானம் மீது விவாதம் நடைபெறவில்லை நாடாளுமன்றம் நாளைவரை ஒத்திவைப்பு

0
11

ஐ.நா. தீர்மானம் மீது விவாதம் இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறவிருந்த நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு அணியினர் சபையில் இடையூறுகளை ஏற்படுத்ததியதால் சபை நடவடிக்கைகள் நாளை வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் கருஜயசூரிய அறிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று கூட்டு எதிரணியின் உறுப்பினர்களுக்கு நேரத்தை ஒதுக்குவதில் ஏற்பட்ட நெருக்கடியாலேயே பிரச்சினை தோன்றியது. இதன் காரணமாக ஐ.நா. தீர்மானம் குறித்த விவாதம் நடைபெறவில்லை. சபையின் நடவடிக்கைகள் முற்பகல் 11.30க்கு முடிவடைந்திருந்தது.

எதிர் தரப்புக்கு போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன சுட்டிக்காட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஈபிடிபி ஆகிய மாத்திரமே எதிர்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்துவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எதிர்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருப்போருக்கு ஆளும் கட்சியின் நேரமே ஒதுக்கப்பட வேண்டும். இதற்காக எதிர்கட்சியின் காலத்தை பெற்றுக் கொடுக்க முடியாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார்.

இதனை தொடர்ந்து நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக சபாநாயகர் நாடாளுமன்றத்தை நாளைவரை ஒத்திவைத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments