ஐ.தே.க செயலாளராக இம்தியாஸ் ?

0
1082

ஐக்கிய தேசிய கட்சியின் செயலாளராக இம்தியாஸ் பாக்கிர்மாக்காரை நியமிக்குமாறு கட்சியின் தலைவரும், பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடைபெற்று முடிந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில் பாரிய பின்னடைவை ஐக்கிய தேசிய கட்சி எதிர்நோக்கியுள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டள்ளது.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் கபீர் ஹாசீம் தனது பொதுச் செயலாளர் பதவியிலிருந்து இராஜினாமா செய்யவுள்ளதாகவும் நேற்றைய தினம் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com