ஐ.தே.க அரசாங்கத்தின் அமைச்சரவை நாளை சத்தியபிரமாணம்?

0
659

ஐக்கிய தேசிய கட்சியின் தனி அரசாங்கத்தின் அமைச்சரவை நாளையத்தினம் சத்தியப்பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையின் அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் தற்போழுது கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த தற்போதைய அமைச்சர்களின் பதவிகளிலும் மாற்றம் ஏற்படும் என்றும், சில அமைச்சர்களுக்கு மேலதிக பொறுப்புகள் வழங்கப்படக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு இதுவரை விடுக்கப்படவில்லை. இந்நிலையில் கொழும்பு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com