ஐ.தே.கவின் பதவிகளில் எவ்வித மாற்றமும் ஏற்படாது மத்திய குழு கூட்டம் குறித்து அமைச்சர் கயந்த தகவல்

0
26

ஐ.தே.கவின் பதவிகளில் அதிரடி மாற்றங்களை மேற்கொள்ளும் முகமாக நேற்று கட்சியின் மத்திய செயற்குழு கூடுவதாக கூறப்பட்டிருந்தாலும், இன்றைய கூட்டத்தில் பதவிகளின் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் எவ்விதமான கலந்துரையாடலும் இடம்பெறவில்லை நாடாளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க கூறியுள்ளார்.

 அமைச்சர் கயந்த கருணாதிலக்க
அமைச்சர் கயந்த கருணாதிலக்க

ஐ.தே.கவின் மத்திய செயற்குழுக் கூட்டம் இன்று காலை சிறிகொத்தாவில் நடைபெற்றது. கட்சியின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் மேற்படி கூட்டம் நடைபெற்றது.

இதன்போது ஐ.தே.கவின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள், மே தினத்தை சிறப்பாக நடத்துவது, நாட்டின் அபிவித்திப் பணிகள் மக்களை சென்றடையும் வகையில் முன்னெடுப்பது, கட்சி மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுப்பது உள்ளிட்ட விடயங்களே ஆழமாக ஆராயப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

அதவேளை, பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவுக்கு உபத் தலைவர் பதவியை வழங்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியிருந்தமை வதந்திகளாகும். அவ்வாறு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments