ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலைவர் கொல்லப்படவில்லை – புதிய ஆதாரங்கள் வெளியானது

0
27

ஐ.எஸ்.தீவிரவாதிகளின் தலைவர் அபு பக்கர் அல் பகாடி கொல்லப்படவில்லை என்பதற்கான புதிய ஆதாரத்தை குறித்த தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ளது.

அபூ பக்கர் அல் பகாடி ரஷ்யாவினால் மேற்கொள்ளப்பட்ட வான் தாக்குதல் ஒன்றில் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

எனினும் அவர் இன்னும் உயிருடன் இருப்பதாக உறுதிப்படுத்தும் வகையில், அண்மையில் பதிவு செய்யப்பட்ட குரல்பதிவு ஒன்றை ஐ.எஸ். தீவிரவாதிகள் வெளியிட்டுள்ளனர்.

குறித்த குரல்பதிவில், வடகொரியாவினால் ஜப்பான் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்த கருத்துக்கள் உள்ளன.

எவ்வாறாயினும், அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டபோதும், அதற்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

எனவே அவர் இன்னும் உயிருடன் இருப்பதாகவே கருதுவதாக ஐ.எஸ்.தீவிரவாதிகளுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் அமெரிக்க படையினரின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments