ஐஸ்க்கு பதிலாக காஜல்

0
195

ஐஸ்க்கு பதிலாக காஜல்

ஐஸ்க்கு

தமிழில் ஜீன்ஸ், எந்திரன், ராவணன் போன்ற படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராய்.

இவர் திருமணத்துக்கு பின்னர் சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்தவர் கடந்த 2 வருடத்துக்கு முன் மீண்டும் நடிக்க வந்தார்.

இதையடுத்து தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ராயை நடிக்க வைக்க மணிரத்னம் முயற்சியை மேற்கொண்ட நிலையில் அந்த திட்டம் இடைநிறுத்தப்பட்டது.

ஐஸ்க்கு

வெற்றி படங்களை வழங்கிய இயக்குனர் பி.வாசு. சமீபத்தில் லாரன்ஸ் நடித்த சிவலிங்கா படத்தை இயக்கினார்.

இந்த திரைப்படத்தை அடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை ஒன்றை இயக்க முடிவு செய்துள்ளார்.

அதற்காக ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்வதற்காக அவரை சந்தித்துள்ள நிலையில் அந்த முயற்சி வீணானது.

ஐஸ்க்கு

தற்போது ஐஸ்வர்யாராயை ஒப்பந்தம் செய்ய எண்ணிய கதாபாத்திரத்தில், காஜல் அகர்வாலை வைத்து இயக்க உள்ளார் இயக்குனர் வாசு.

குறித்த திரைப்படத்திற்கு இன்னும் பெயரிடப்படாத நிலையில், அடுத்த ஆண்டு படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com