ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் அரையிறுதி: ரியல் மெட்ரிட் அட்லெடிகோ மாட்ரிட் பலப்பரீட்சை

0
49

ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டிக்கு ரியல் மெட்ரிட் அட்லெடிகோ மாட்ரிட், யுவான்டஸ் மொனாகோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான சாம்பயின்ஸ் லீக் காலிறுதிப் போட்டிகள் நேற்றுமுன்தினம் (புதன்கிழமை) முடிவடைந்தது. இதில் ரியல் மாட்ரிட் (ஸ்பெயின்), அட்லெடிகோ மாட்ரிட் (ஸ்பெயின்), யுவான்டஸ் (இத்தாலி), மொனாகோ அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதிப் போட்டிக்கான அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி அரையிறுதிப் போட்டிகள் 2ஆம் திகதி நடைபெறவுள்ளன. முதல் போட்டியில் மொனாகோ யுவான்டஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி மொனாகோவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறுகிறது.

மற்றொரு போட்டியில் ரியல் மெட்ரிட் அட்லெடிகோ மாட்ரிட் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தப் போட்டி ரியல் மெட்ரிட்டிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெறுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com