ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த 42 மில்லியன் யூரோவை வழங்கியது

0
39

ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையில் நல்லிணக்கத்தை வலுப்படுத்த 42 மில்லியன் யூரோவை வழங்கியுள்ளது.

நிதியமைச்சின் செயலாளர் சமரதுங்கவுக்கும், ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டங் லாய் மார்கேயுக்கும் இடையில் கடந்த ஏப்ரல் 6 ஆம் திகதி இடம்பெற்ற சந்திப்பின்போது இலங்கையின் விவசாயத் துறையை நவீன மயப்படுத்தவும் நல்லிணக்க செயல்முறைகளை வலுப்படுத்தவும் 42 மில்லியன் யூரோவை உதவியாக வழங்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது.

விவசாயத்துறையை நவீன மயப்படுத்துவதற்கு 30 மில்லியன் யூரோவும், நல்லிணக்க செயல்முறையை வலுப்படுத்துவதற்கும் 12 மில்லியன் யூரோவும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை இலங்கைக்கு வழங்கப்படுமா இல்லையா என்பது குறித்த தீர்மானம் அடுத்த மாதம் 15ஆம் திகதியின் பின்னர் அறிவிக்கப்படவுள்ளது.

ஐரோப்பிய நாடுகளுக்கான ஏற்றுமதி வரிச்சலுகை ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு மீள வழங்குவது குறித்த அறிக்கை கடந்த டிசம்பர் மாதம் ஐரோப்பிய ஆணைக்குழுவால் ஐரோப்பிய நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

ஜி.எஸ்.பி. வரிச்சலுகையை இலங்கை அரசு மீளப் பெற்றுக்கொள்ள வேண்டுமாயின் ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் 27 நிபந்தனைகளில் அரசு முன்னேற்றம் காண வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய தலைவர் டொனால் டஸ்கி தெரிவித்திவிருந்தார். குறித்த உடன்படிக்கையிலும் இலங்கை கைச்சாத்திட்டிருந்தது.

ஐரோப்பிய ஒன்றியம்

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 நிபந்தனைகளில் முன்னேற்றம் காண இலங்கை அரசுக்கு ஆறுமாதகாலம் அவகாசம் கொடுக்கப்பட்டது. அதன்படி அடுத்த மே மாதத்துடன், ஆறு மாதங்கள் ஆகவுள்ள நிலையிலேயே மேற்படி அறிவிப்பு வந்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் உயர்மட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது குறித்து ஆராந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com