ஏறாவூர் பள்ளிவாசலில் கைவரிசையை காட்டிய மர்ம நபர்கள்

0
433

ஏறாவூர் முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு தொகைப் பணம் திருடப்பட்டுள்ளது.

இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பள்ளிவாசல் புனரமைப்பு மற்றும் நிருவாகப் பணிகளுக்காக பொதுமக்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்காக பள்ளிவாசலில் உண்டியல் வைக்கப்பட்டிருந்ததாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர்.

உண்டியலில் இடப்பட்டிருந்த ஒரு தொகை சில்லறைகளையும் தாள் நாணயங்களையும் திருடியவர்கள் சேதமாக்கப்பட்ட உண்டியலை கைவிட்டுச் சென்றிருள்ளனர்.

அதிகாலைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தவர்களே இவ்வாறு உண்டியல் உடைத்து திருடப்பட்டிருப்பதை அறிந்து நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments