ஏமாற்றிய இலங்கை வீரர், கண்டுகொள்ளாத அம்பயர்!

0
2597

ஏமாற்றிய இலங்கை வீரர், கண்டுகொள்ளாத அம்பயர்!

இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடத்த மூன்றாவது நாள் ஆட்டத்தில் சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று நடந்து இருக்கிறது. இலங்கை அணி கேப்டன் தினேஷ் சண்டிமால் இந்த சர்ச்சைக்கு சொந்தக்காரர் ஆகி உள்ளார். அதன்படி நேற்று இவர் பந்தை தடுப்பது போல செயல்பட்டு  பேட்ஸ்மேன்களை ஏமாற்றி இருக்கிறார்.

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நேற்று நடத்த மூன்றாவது நாள் டெஸ்ட் போட்டியில் தினேஷ் சண்டிமால் பேக் பீல்டிங் செய்து இருக்கிறார். புவனேஷ்வர் குமார் பவுண்டரி லைனை நோக்கி அடித்த பந்தை இவர் எடுப்பதற்காக ஓடினார். ஆனால் பந்தை எடுக்காமலே எடுத்தது போல இவர் செய்கை செய்து இருக்கிறார். மேலும் அதை கீப்பரிடம் தூக்கி எறிவது போலவும் நடித்து இருக்கிறார்.

 

சர்வதேச கிரிக்கெட் விதிகளின் படி இது மிகப்பெரிய தவறு ஆகும். ஆனால் இதை களத்தில் இருந்த நடுவர்கள் கொஞ்சம் கூட கண்டுகொள்ளாமல் அமைதியா இருந்துள்ளனர். தற்போது இது பெரிய சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement