எல்லை நிர்ணய அறிக்கை இறுதிக்கட்டத்தில்

0
9

எல்லை நிர்ணய அறிக்கை மாகாண சபைத் தேர்தலுக்காக தேர்தல் தொகுதிகளை பிரிப்பதற்கான எல்லை நிர்ணயக் குழுவின் அறிக்கை பெப்ரவரி மாதம் முதல் வாரமளவில் கையளிக்கப்படும் என்று எல்லை நிர்ணய குழுவின் செயலாளர் சமன் ஶ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையை தயாரிக்கும் நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை எதிர்வரும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரசியல் கட்சிகள், அமைப்புக்கள் மற்றும் பொது மக்களிடமிருந்து கருத்துக்கள் பெற்றுக் கொள்ளப்பட்ட பின்னர் தயாரிக்கப்பட்ட அறிக்கை ஜனவரி 31ஆம் திகதிக்கு முன்னர் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபை அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் கையளிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com