எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளை – மூன்று பேர் கைது

0
31
எரிபொருள் நிரப்புமாத்தறை – கம்புருகமுவ, அகுரெஸ்ஸ, வெலிகம, காலி உள்ளிட்ட பிரதேசங்களில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையங்களில் இடம்பெற்ற கொள்ளை சம்பவம் தொடர்பில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அஹங்கம பிரதேசத்தில் வைத்தே அவர்கள் கைது செய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இதன்போது அவர்களிடம் இருந்து உந்துருளி ஒன்றும் காவற்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்கள் 25 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
அண்மையில் குறித்த பகுதிகளில் உள்ள எரிப்பொருள் நிரப்பு நிலையங்களில் கொள்ளையிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Advertisement