எம்.ஜி.ஆர். வேடத்தில் சதீஷ் குமார்

0
174

மக்கள் திலகம் எம்.ஜி.இராமச்சந்திரன்(எம்.ஜி.ஆர்) வாழ்க்கை ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் திரைப்படமாக எடுக்கப்படவுள்ளது.

MGR

எம்.ஜி.ஆரின் சிறு வயது தொடங்கி தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஆனது வரை மூன்று பருவங்களாக பகுக்கப்பட்டு அந்தந்த வயதுக்கான நடிகர்கள் தேர்வு நடைபெற்றது.

MGR

ரமணா கம்யூனிகேஷன்ஸ் இன் முன்னாள் தயாரிப்புகளான ‘காமராஜ்’ மற்றும் ‘முதல்வர் மகாத்மா’ ஆகிய திரைப்படங்களில் பெருந்தலைவர், ராஜாஜி, காந்திஜி, இந்திரா போன்று உருவ ஒற்றுமை உள்ள நடிகர்கள் நடித்திருந்தனர், அதைப்போன்று இப்படத்துக்கான நடிகர்கள் தேர்விலும் கவனம் செலுத்தப்பட்டது.

MGR

எம்.ஜி.ஆர் சினிமா, மற்றும் அரசியலில் வெற்றி பெற்று முதல்வரான முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சதீஷ் குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

MGR

நடிக்க சதீஷ் குமார் பல தென்னிந்திய மொழிப்படங்கள், மற்றும் விளம்பரப் படங்களில் நடித்துள்ளதுடன், இப்படத்துக்காக அவர் வாள் சண்டை, சிலம்பம், மல்யுத்தம் போன்ற சண்டைப்பயிற்சிகளை கற்று வருகிறார்.

அண்ணாவாக ‘பெரியார்’ திரைப்படத்தில் நடித்த S.S.ஸ்டான்லி இப்படத்திலும் அண்ணாவாக நடிக்கவுள்ளார்.

MGR

‘காமராஜ்’ திரைப்படத்திற்கு திரைக்கதை வசனம் எழுதிய செம்பூர் ஜெயராஜ் இப்படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார்.

ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பில் அ.பாலகிருஷ்ணன் இப்படத்தை தயாரிக்கிறார்.

MGR

இப்படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதம் 8ம் திகதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆரம்பித்துவைக்கவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com