எந்திரன் 2.0 படத்தின் டீஸர் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.

0
100

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது `எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான `2.0′ படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட 4 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் பொலிவுட் பிரபலம் அக்‌ஷய் குமார் நடித்து வருகிறார். இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஏமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்திற்கு ஒஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க, நிரவ் ஷா இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில், படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ஜனவரி 30 ஆம் திகதி சென்னையில் தொடங்க உள்ளது. அதற்காக மகாபலிபுரத்தில் பிரம்மாண்டமான செட்களும் அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் `2.0′ படத்தின் டீசரை தமிழ் புத்தாண்டு அன்று(ஏப்ரல் 14) ஆம் திகதி வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

படத்தை தீபாவளி விருந்தாக ஒக்டோபர் 19ஆம் திகதி வெளியிடவும் படக்குழு திட்டமிட்டுள்ளது.

Comments

comments