கோட்டாவுக்கு அழைப்பாணை – தவிர்த்தால் கைதாவாரா?

0
468

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸக்கு ஊழல் தொடர்பான விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவால் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அழைப்பானது, எதிர்வரும் 15ஆம் திகதி ஆணைக்குழுவில் ஆஜராகும் படியே பணிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் இருந்த பழைய இரும்புகள் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனாலும். பல தடவைகள் அழைப்பாணை பிறப்பிக்கப்பட்ட போதிலும் கோட்டாபய ராஜபக்ஸ அதை தவிர்த்து வந்தார். இம்முறை தவிர்ப்பாராக இருந்தால் அவர் கைதுசெய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments