ஊவா மாகாண சபை உறுப்பினருக்கு பிணை

0
9

ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆறுமுகம் கணேசமூர்த்திக்கு எதிரான பண மோசடிகள் வழக்கு விசாரணை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

பதுளையில் இரு புகார்களும், பசறையில் இரு புகார்களும், ஹாலி-எலையில் மூன்று புகார்கள் என மூன்று பொலிஸ் நிலையங்களினால் தொடரப்பட்ட வழக்குகள், பதுளை நீதவான் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.

பதுளையில் 24 இலட்ச ரூபாயை மோசடி செய்த குற்றச்சாட்டு தொடர்பில், அவர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார்.

அதன்போது, 26 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல அவருக்கு அனுமதித்த நீதவான் நயந்த சமரதுங்க, மார்ச் 20ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

.
Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com