ஜனாதிபதி, பிரதமருக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

0
55

உள்ளூராட்சித் தேர்தல் வாக்களிப்பு முடியும் வரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்க ஆகியோர் எந்த அறிக்கைகளையும் வெளியிடக் கூடாது என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் பணித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஙிந்த தேசப்பிரிய நேற்று ஊடக நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலிலேயே இதனை குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி அல்லது பிரதமர் தேசிய பாதுகாப்பு தொடர்பானதோ அல்லது திடீர் அவசர நிலை தொடர்பாகவோ – அல்லது வேறு எந்த அறிக்கையை வெளியிட்டாலும், அதனை பிரசுரிக்கவோ, ஒலி, ஒளிபரப்பவோ கூடாது.

இன்று மாலை 4 மணியளவில் வாக்களிப்பு முடியும் வரை இந்த தடை நடைமுறையில் இருக்கும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com