உள்ளூராட்சித் தேர்தலுக்கு அனைவரும் தயாராகுமாறு பிரதமர் பணிப்பு

0
122

உள்ளூராட்சித் தேர்தலுக்கு அனைவரையும் தயார் நிலையில் இருக்குமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் நேற்று கட்சியின் தலைமையமான சிறிகொத்தாவில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், உள்ளூராட்சிசபைத் தேர்தலை எந்த முறையின் கீழ் நடத்துவது என்பது தொடர்பில் ஆராய, ஐக்கிய தேசியக் கட்சி விஷேட குழுவொன்றை அமைத்துள்ளது.

மேற்படி குழு ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் கபீர் ஹாசிம் தலைமையில் இயங்கவுள்ளது.
அடுத்து நடைபெறவுள்ள இரண்டு தேர்தல்களை எவ்வாறு சந்திப்பது என்பது குறித்தும் கூட்டத்தின் போது விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேர்தல்களை எதிர்கொள்ள கட்சியின் கீழ் மட்டத்தில் இருந்து உறுப்பினர்களை தயார் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கபீர் ஹாசிம் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com