உலக அகதிகள் தினம் இன்று – 65 மில்லியன் மக்கள் இடம் பெயர்வு

0
43

ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் 2000ஆம் ஆண்டு, ஜூன் 20ம் திகதி உலக அகதிகள் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று உலகம் முழுவதும் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அகதிகள், அடைக்கலம் கோருவோர் மற்றும் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை உலகம் முழுவதும் 65.6 மில்லியன்களாக அதிகரித்துள்ளதாக ஐ.நா. அகதிகள் அமைப்பு தெரிவித்துள்ளது.


ஐ.நா அகதிகள் அமைப்பின் ஆண்டறிக்கையில் 2016 ஆம் ஆண்டின் இறுதியில் எடுத்த இந்த கணக்கெடுப்பின்படி, இடம் பெயர்ந்தோர் எண்ணிக்கை 2015 ஆம் ஆண்டை விட 3 லட்சம் அதிகமாகியிருக்கிறது.

2014-15ஆம் ஆண்டில் ஐந்து மில்லியன் பேர் இடம்பெயர்ந்திருந்ததுடன் ஒப்பிடும்போது இது குறைவான அதிகரிப்பு தான்.

என்றாலும், இது சர்வதேச இராஜதந்திரத்தின் அதிர்ச்சியூட்டும் தோல்வி என்று ஐ.நா அகதிகள் முகமையின் உயர் ஆணையர் பிலிப்போ கிராண்டி, என்று கூறினார்.
“உலகத்தில் சமாதானத்தை உருவாக்க முடியவில்லை” என்று பிலிப்போ கிராண்டி கூறுகிறார்.

“எனவே, பழைய முரண்பாடுகள் தொடர்வதையும், புதிய மோதல்கள் வெடிப்பதையும் பார்க்கமுடியும், இவையே இடம் பெயர்தலுக்கான காரணமாகிறது. கட்டாயமான இடம்பெயர்வு என்பது, முடிவடையா போர்களுக்கான ஓர் அடையாளம்” என்றார் அவர்.

 

உலக அளவில் இடம்பெயர்ந்த மக்கள் – எண்ணிக்கையில்


உலக அளவில் 65.6 மில்லியன் மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர், இது இங்கிலாந்தின் மக்கள் தொகையை விட அதிகம். இந்த எண்ணிக்கையில்:

 22.5 மில்லியன் அகதிகள்

 40.3 மில்லியன் மக்கள் உள்நாட்டிலேயே இடம் பெயர்ந்தவர்கள்

 2.8 மில்லியன் மக்கள் தஞ்சம் கோருகின்றனர்

அகதிகள் எங்கிருந்து வருகிறார்கள்?

 சிரியா: 5.5 மில்லியன்

 ஆப்கானிஸ்தான்: 2.5 மில்லியன்

 தெற்கு சூடான்: 1.4 மில்லியன்

அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கும் நாடுகள்

 துருக்கி: 2.9 மில்லியன்

பாகிஸ்தான்: 1.4 மில்லியன்

 லெபனான்: 1 மில்லியன்

 இரான்: 979,4000

 உகாண்டா: 940,800

 எத்தியோப்பியா: 791,600

வேறு 6.3 மில்லியன் பேர், சிரியாவிற்குள்ளேயே இடம்பெயர்ந்துள்ளனர்.

   உலக அகதிகள் தினம்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com