உலகின் மிகவும் விலையுயர்ந்த கால்பந்து வீரர்: 185 மில்லியன் பவுண்டுடன் நெய்மர் முதலிடம்

0
17

உலகின் மிகவும் விலையுயர்ந்த கால்பந்து வீரர்கள் பட்டியலில் பார்சிலோனா அணியின் நெய்மர் 185 மில்லியன் பவுண்டுடன் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கால்பந்து கிளப்புகளில் விளையாடும் வீரர்கள் மில்லியன் டாலர் கணக்கில் பணம் கொடுத்து வாங்கப்படுகிறார்கள். அதேபோல் ஒவ்வொரு வீரர்களும் வாரத்திற்கு கோடிக்கணக்கில் சம்பளம் பெறுகிறார்கள்.

இந்த பட்டியலில் கிறிஸ்டியானோ ரொனால்டோ, மெஸ்சி, நெய்மர், சுவாரஸ், பால் போக்பா, கிறிஸ்மான் போன்றோர் குறிப்பிடத்தகுந்தவர்கள்.

சி.ஐ.இ.எஸ். கால்பந்து கண்காணிப்பு ஆய்வகம் சார்பில் உலகளவில் விலையுயர்ந்த கால்பந்து வீரர்கள் யார் என்பது குறித்த ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் பார்சிலோனா அணிக்காக விளையாடும் பிரேசில் அணியின் தலைவர் நெய்மர் முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் மதிப்பு 185 மில்லியன் பவுண்டு என அந்த ஆய்வகம் தெரிவித்துள்ளது.

டோட்டன்ஹாம் வீரர் டெல் அலி 137 மில்லியன் பவுண்டுடன் 2வது இடத்தை பிடித்துள்ளார். மற்றொரு டோட்டன்ஹாம் வீரர் ஹாரி கேன் 135 மில்லியன் பவுண்டுடன் 3ஆவது இடத்தை பிடித்துள்ளார். பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி 134 மில்லியன் பவுண்டுடன் 4ஆவது இடத்தை பிடித்துள்ளார். அட்லெடிகோ மாட்ரிட் அணியின் கிறிஸ்மான் 132 மில்லியன் பவுண்டுடன் 5ஆவது இடத்தில் உள்ளார்.

ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ 99 மில்லியன் பவுண்டுடன் 11ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com