உயர்தரப் பரீட்சை முறைகேடுகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபரிடம் முறைபாடு

0
43

நடைபெற்று வரும் கல்விபொதுதாராதர உயர்தரப் பரீட்சையின் இரசாயன விஞ்ஞானப் பரீட்சை வினாக்கள் குறித்து தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவர் துண்டுப்பிரசுரம் விநியோகித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் டபிள்யு.எம்.என்.ஜே.புஸ்பகுமார இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.

உயர்தரப் பரீட்சை

நேற்றைய தினம் கம்பஹா பிரதேச மகளிர் பாடசாலைக்கு முன்பாக இந்த துண்;டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே இந்த விடயம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement