உத்தேச பயங்கவரவாதத் தடைச்சட்டம் தகவல் அறியும் சட்டத்துக்கு பாதிப்பு

0
29

உத்தேச பயங்கவரவாதத் தடைச்சட்டம் தகவல் அறியும் சட்டத்தை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது.

கடந்த வாரம் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டகொள்கை கட்டமைப்பு இரகசிய தகவல்களை பெறுவதற்காக சட்டவிரோதமான, ஏற்றுக்கொள்ளப்படாத நடவடிக்கைகளில் ஈடுபடுவது குற்றம் என தெரிவித்துள்ளது.

உத்தேச பயங்கவரவாதத்

மேலும் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக திட்டமிடுபவரிற்கு வழங்குவதற்காக இரகசிய தகவல்களை நேரடியாக பெற முயல்வதும் குற்றம் என தெரிவித்துள்ளது.

இவை அனைத்தும் முன்னைய கொள்கை கட்டமைப்பிலும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக இலங்கை அரசாங்கத்தின் தகவல் உரிமை சட்டத்திற்கு புதிய பயங்கரவாத தடைச்சட்டம் முரணாகயிருப்பது குறித்த கேள்விகள் எழுந்துள்ளன.

தகவல் அறிவதற்கான உரிமை சட்டம் பொதுபாதுகாப்பின் அடிப்படையில் தகவல்களை மறைக்க முடியாது என தெரிவித்திருந்தது. தேசிய பாதுகாப்பு, தேசத்தின் பாதுகாப்பு ஆகிய காரணங்களிற்காக மாத்திரமே தகவல்களை வழங்க மறுக்கலாம் என அந்த சட்டம் தெரிவித்திருந்தது.

இதனை அடிப்படையாக வைத்து பார்க்கும்போது உத்தேச பயங்கரவாத தடைச்சட்டம் தகவல் உரிமை சட்டத்திற்கு முரணாக காணப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement