உதவி ஆசிரியர்களுக்கு இம்மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமைக்கு மாகாணங்கள்தான் பொறுப்பு

0
20
Want create site? Find Free WordPress Themes and plugins.

உதவி ஆசிரியர்களுக்கு இம்மாதம் முதல் சம்பள அதிகரிப்பு வழங்கப்படாமைக்கு மாகாணங்கள்தான் பொறுப்பு என்று கல்வி இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மலையக பெருந்தோட்ட ஆசிரிய உதவியாளருக்கு வழங்கப்பட்டுவரும் 6000 ரூபா கொடுப்பனவில் இருந்து 4000 ரூபா அதிகரித்து மொத்தமாக 10000 ரூபா பெற்றுக்கொடுப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்து.

பாராளுமன்ற அனுமதி பெற்று அதனை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு 03.05.2017 அன்று திகதி இடப்பட்ட சுற்று நிருபம் ஒன்று அனைத்து மாகாண செயலாளர்ளுக்கும் மாகாண கல்விச் செயலாளர்ளுக்கும் மாகாண கல்விப் பணிப்பாளர்களுக்கும் வலய கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பட்டுள்ளது.

அதற்கமைய மாகாணங்கள் நடவடிக்கைளை மேற்கொண்டு பெருந்தோட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்து கொடுக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். பெப்ரவரி மாத முதல் நிலுவையுடன் இம்மாதம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதை இதுவரைக்கும் வழங்கவில்லை எனவே உடனடியாக வழங்குவதற்கு மாகாணங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந் நிலையில் மீண்டும் நான் வழங்கவில்லை என கூறி வருகின்றனர். இது தப்பு நான் என்ன செய்ய வேண்டுமோ அதனை செய்துவிட்டேன் இனி மாகாணங்கள் தான் அதை மேலதிகமானதை செய்ய வேண்டும். இது தொடர்பில் கேள்விகள் எழுப்புவது என்றால் அது மாகாணங்களுடனானது என கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் தெரிவிக்கின்றார்.


புசல்லாவ இந்து தேசிய கல்லூரியில் நடைபெற்ற 3 மாடி கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவும்¸ தொழிநுட்ப பீடம்¸ விஞ்ஞான ஆய்வு கூடம்¸ பல் ஊடக தொகுதி திறப்பு¸ விழாவிற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றிய போதே இவ்வாறு கூறினார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிய பின்னர்தான் 10ஆயிரம் ரூபாவாக சம்பளம் அதிகரிக்கப்பட்டதாகவும் பெப்ரவரி மாதம் முதல் நிலுவைப் பணத்துடன் இம்மாதம் உதவி ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு அமுலுக்கு வரும் என்று கல்வி இராஜாங்க அமைச்சர் அண்மையில் கூறியிருந்தார்.

ஆனால், இம்மாதம் குறித்த ஆசிரியர்களுக்கு சம்பள அதிகரிப்பு வழங்கப்படவில்லை. மாகாணங்களுக்கு சுற்று நிருபங்கள் அனுப்பப்பட்டுவிட்டன. அதற்கு மாகாணங்கள்தான் பொறுப்பு என்று தற்போது கல்வி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

பிரதமர் மற்றும் கல்வி அமைச்சு எடுத்த தீர்மானத்தை மாகாணங்கள் அமுல்படுத்த வேண்டியது மாகாணங்களின் கடமை. சில மாகாணங்களுக்கும், வலயக் கல்விப் பணிமனைகளுக்கும் சுற்று நிருபங்கள் கிடைக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

எனவே, ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டை சுமத்துவதை விடுத்து உடனடியாக இந்த விடயத்தில் கல்வி இராஜாங்க அமைச்சர் தலையீடு செய்து பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதே உதவி ஆசிரியர்களின் கோரிக்கையாகவுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Comments

comments