உதயநிதி படத்திற்கு எம்.ஜி.ஆர் பாடல் தலைப்பு!

0
73

உதயநிதி படத்திற்கு எம்.ஜி.ஆர்  பாடல் தலைப்பு!

நடிகர் உதயநிதி நடிப்பில் எழில் இயக்கத்தில் உருவாகி வரும் ‘சரவணன் இருக்க பயமேன்’ படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

இந்நிலையில் உதயநிதி நடித்து வரும் இன்னொரு படத்தின் தலைப்பு  குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது . ‘சிகரம் தொடு’ இயக்குனர் கெளரவ் நாராயணன் இயக்கி வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று தற்போது இந்த படத்தின் 80% படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது.

இந்நிலையில் இந்த படத்திற்கு ‘இப்படை வெல்லும்’ என்ற டைட்டில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. எம்.ஜி.ஆர் நடித்த ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இடம்பெற்ற ‘இப்படை தோற்கின் எப்படை வெல்லும்’ என்ற பாடலை ஞாபகப்படுத்தும் வகையில் இந்த தலைப்பு  வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

உதயநிதி, மஞ்சிமா மோகன், ஆர்.கே.சுரேஷ், டேனியல் பாலஜி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு டி.இமான் இசையமைக்கின்றார். இந்த படத்தை ‘2.0’ படத்தை தயாரித்து வரும் லைகா நிறுவனம் தயாரிக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

comments