உதயசூரியனில் போட்டி – மறுக்கிறார் சி.வி

0
33

அடுத்த மாகாணசபைத் தேர்தலில், உதயசூரியன் சின்னத்தில் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக வெளியான தகவல்களை நிராகரித்து, வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடக்கு கிழக்கில் இத்தேர்தல் காலத்தில் என் பெயரை இழுத்து கட்சிகளின் சார்பிலும் தனிப்பட்ட வேட்பாளர்கள் சார்பிலும் நன்மைகளைப் பெற பலர் எத்தனிக்கின்றார்கள் என்று தெரியவருகின்றது.

எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றி நான் எந்தவித முடிவும் எடுக்காமலேயே என்னுடைய சின்னம் பற்றி எல்லாம் கருத்துக்கள் வெளிவந்துள்ளன.

நான் இதுவரையில் எதிர்வரும் வடமாகாண சபைத் தேர்தல் பற்றியோ கட்சி, சின்னம் பற்றியோ இப்போது சிந்திக்கவில்லை. எனது அரசியல் கொள்கைகள் கிட்டத்தட்ட தமிழ் மக்கள் பேரவையின் கொள்கைகளை ஒத்தது என்று ஏற்கனவே கூறியுள்ளேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.