உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

0
37

உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக

யாழ்ப்பாணம், நல்லாட்சி அரசே வாக்குறுதி என்னாச்சு , உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே! போன்ற கோஷங்களை எழுப்பியவாறு உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழில் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிச கட்சியும், சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும் இணைந்து யாழ் மத்திய பஸ் நிலையத்தின் முன்பாக இன்று (24.10) காலை 10.30 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்தார்கள்.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக

ஆர்ப்பாட்டத்தின் போது, உண்ணாவிரதம் இருக்கும் அரசியல் கைதிகளின் உயிர்களைப் பறிக்காதே, அவர்களின் வழக்குகளை அநுராதபுரத்தில் இருந்து வவுனியாவுக்கு மாற்று, அனைத்து அரசியல் கைதிகளையும் பொது மன்னிப்பில் விடுதலை செய், பயங்கரவாத தடைச் சட்டத்தினை தடை செய், வாய்ப் பேச்சில் நல்லிணக்கம் விதைப்பது அரசியல் கைதிகளையா? போன்ற கோஷங்களை எழுப்பியவாறு கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகஅரசியல் கைதிகளுக்கு ஆதரவாகஅரசியல் கைதிகளுக்கு ஆதரவாக

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement