ஈராக் நிவாரண முகாமில் 800 பேர் வாந்தி-மயக்கம்

0
18
ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசம் இருந்த மொசூல் நகரம் ராணுவத்தால் படிப்படியாக மீட்கப்பட்டு வருகிறது.
அமெரிக்க கூட்டுப்படையின் உதவியுடன் ஈராக் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தி வருகிறது.
எனவே அங்கு தங்கியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு ஐ.நா. அகதிகள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு தங்கியிருக்கும் மக்களுக்கு ஒரு தனியார் அமைப்பின் மூலம் விருந்து வழங்கப்பட்டது.
அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் சுமார் 800 பேருக்கு வாந்தி- மயக்கம் ஏற்பட்டது.
அவர்களில் 800 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். வழங்கப்பட்ட உணவு கெட்டு போய் இருந்ததால் வாந்தி-மயக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.