ஜனாதிபதியின் ஈதுல் பிதுர் வாழ்த்துச் செய்தி

0
22

“உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்கள், ரமழான் மாதத்தில் கடைபிடித்துவரும் பரஸ்பர கௌரவம், சமத்துவம், ஈகை மற்றும் ஏழைகளுக்கு உதவுதல் போன்ற பண்புகள், மனிதனது விடுதலை, சுயநலத்திலன்றி பிறர் நலம் பேணுவதிலேயே தங்கியுள்ளது என்பதையே வெளிப்படுத்துகின்றன” என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தனது நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

அவர் அதில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளின் மூலம், முழு மனித சமூகத்துக்கு விடுக்கப்படும் முக்கிய செய்தி, பிரபஞ்ச சமத்துவம் என்பதாகும். சமய, ஆன்மீக மற்றும் சமூக பெறுமானங்களின் அடிப்படையில், எல்லாவற்றிலும் சமத்துவத்தைப் பேணுவதே, அதன்மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், அடுத்தவர்களது கஷ்டங்களைப் புரிந்துகொள்வதுடன், தமக்குத்தாம் நேர்மையாக இருப்பதனால், மனிதம் வளம்பெறும் என்பதை ரமழான் நோன்பு எமக்கு நினைவுப்படுத்துகிறது.

சமய எல்லைகளைக் கடந்து, பொது மானிடத்தை இலக்காகக்கொண்ட இத்தகைய வளமான தொலைநோக்குடைய ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை கொண்டாடும் இலங்கை மற்றும் உலகெங்கிலும் வாழும் முஸ்லிம் மக்களுக்கு, எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்து க்கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com