இளையோர் நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு மஹரகமவில் ஆரம்பமானது.

0
12

இளையோர் நாடாளுமன்றத்தின் விசேட அமர்வு இன்று மஹரகமவில் தேசிய இளைஞர் சேவை மன்றத்தில் ஆரம்பமானது.

ஆசியாவின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகளுடன் இணைந்த ஏனைய அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் இதில் பங்குகொண்டுள்ளனர்.

இதன்பொருட்டு 120 பேர் கொண்டு பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது.
இலங்கையின் இளையோர் நாடாளுமன்றம் 224 அங்கத்தவர்களைக் கொண்டது.

இதன் ஊடாக நாடளாவிய ரீதியாக 3 ஆயிரத்திற்கும் அதிகமான விசேட வேலைத்திட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments