இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை 

0
84
இலங்கை வீரர்ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இலங்கை வீரர் சாமர சில்வாவிற்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது
உள்ளுர் விளையாட்டு போட்டியொன்றில் இவர் இந்த ஆட்ட நிர்ணயத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குற்றச்சாட்டு தொடர்பிலான விசாரணைகள் கடந்த 7 மாதங்களாக இடம்பெற்றுவந்த நிலையில் அவருக்கு இந்த போட்டித் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கிரஹம் லெப்ரோ தலைமையில் இலங்கையின் புதிய கிரிக்கட் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
காமினி விக்ரமசிங்ஹ, அசங்க குருசிங்க, ஜெரி வவுட்டர்ஸ் ஆகியோர் உட்பட்டதாக இந்த கிரிக்கட் தெரிவுக் குழு நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Advertisement