இலங்கை விஜயம் மேற்கொண்ட அவுஸ்ரேலிய பிரதமர்

0
16

அவுஸ்ரேலிய பிரதமர்

அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்தை விசேட விமானம் மூலம் இன்று காலை வந்தடைந்தார்.

அவுஸ்ரேலிய பிரதமருக்கு, சட்ட ஒழுங்கு மற்றும் தென்மாகாண அமைச்சர் சாகல ரத்னாயக்க தலைமையில் விமானநிலையத்தில் அமோக வரவேற்பு வழங்கப்பட்டது.

அவுஸ்ரேலிய பிரதமர் மெல்கம் டர்ன்புல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இரு நாடுகளுக்கிடையே பொருளாதார ரீதியில் வலுப்படுத்தல் , சர்வதேச குற்றச்செயல்களை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இலங்கை மற்றும் அவுஸ்ரேலியாவுக்கு இடையிலான இராஜதந்திர நல்லுறவிற்கு 70 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு அவுஸ்ரேலிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்திருப்பதாக இலங்கைக்கான அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com