இலங்கை வருகிறார் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர்

0
9

அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் ஜூலி பிசப் இந்தவாரம் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளுக்கான பயணத்தை அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் இன்று ஆரம்பிக்கவுள்ளார்.

முதலில் இந்தியா செல்லும் அவர் அதையடுத்து கொழும்புக்கு பயணம் மேற்கொள்வார். இந்தப் பயணத்தின் போது அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்க, மற்றும் அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்த திட்டமிட்டுள்ளார்.

பாதுகாப்பு ஒத்துழைப்பு, விஞ்ஞான மற்றும் சக்தி வளங்களில், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குதல் தொடர்பான பேச்சுக்களில் அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் கவனம் செலுத்தவுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments