இலங்கை வந்தடைந்த இந்தியா அணி: நாளை பயிற்சி ஆட்டத்தில் மோதல்

0
40

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு 20 ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக நேற்று மாலை இலங்கை சென்றடைந்தது.

இலங்கை அணி உடனான முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.

இந்தியா- இலங்கை மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 26-ஆம் திகதி காலியில் தொடங்குகிறது. ஆகஸ்ட் 16-ஆம் திகதியுடன் டெஸ்ட் தொடர் முடிகிறது.

ஒருநாள் தொடர் ஆகஸ்ட் 20-ஆம் திகதி முதல் செப்டம்பர் 1-ஆம் திகதிவரை நடக்கிறது. ஒரே ஒரு 20 ஓவர் போட்டி செப்டம்பர் 6-ஆம் திகதி நடைபெறுகிறது.

முதல் டெஸ்ட் போட்டிக்கு முன்பு இந்திய அணி 2 நாள் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. இந்த பயிற்சி ஆட்டம் நாளை தொடங்குகிறது.

இந்திய அணி கடைசியாக 2015-ஆம் ஆண்டு இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடியது. 3 டெஸ்ட் கொண்ட இந்த தொடரை விராட் கோலி தலைமையிலான இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி இருந்தது.

இதனால் இந்த முறையும் இந்திய அணி இலங்கை மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com