இலங்கை மின்சாரசபை பணியாளர்கள் போராட்டத்தில்

0
18
இலங்கை மின்சாரசபை
இலங்கை மின்சாரசபை பணியாளர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டம் தொடர்கின்றது.
இலங்கை மின்சார சபையின் உயர் அதிகாரிகளுக்கு வேதனம் வழங்கப்படுகின்றபோது பாரிய மோசடிகள் இடம்பெறுவதாக கூறி இந்த ஆரப்பாட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
இந்த குற்றச்சாட்டு உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து கடந்த 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த போராட்டம் குறித்து பல பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளபோதும், தீர்வுகள் எட்டப்படாத நிலையில் இன்றும் போராட்டம் தொடர்கின்றது.
மின்சார சபை ஊழியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டாலும் மின்விநியோகத்தில் எந்த பாதிப்பும் இல்லையென மின்வலுத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் ஊழியர்களின் இந்த போராட்டம் தோல்வியடைந்துள்ளதாக அமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய குறிப்பிட்டுள்ளார்.