டீ 20 தொடரை கைப்பற்றியது பாக்கிஸ்தான்

0
686

பாக்கிஸ்தான் அணியுடனான இரண்டாவது டி20 போட்டியிலும் இலங்கை  அணி தோல்வியை தழுவியது.

இந்த போட்டியில் பாக்கிஸ்தான் அணி 2 விக்கட்டுக்களால் வெற்றிப்பெற்றது.

பாகிஸ்தான் அணியுடனான 20க்கு 20 தொடரின் இரண்டாவது போட்டி ஆரம்பமான நிலையில் இலங்கை அணி சுமாராக துடுப்பெடுத்தாடியது.

அபுதாபியில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தை இலங்கை அணிக்கு வழங்கியது.

அதன்படி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 20 ஓவர்களில்
124 ஓட்டங்களுக்கு 9 விக்கட்டுகளை இழந்திருந்தது.

அதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய பாக்கிஸ்தான் அணி 19.5 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றி இலக்கை அடைந்தது .

இதன் படி மூன்று போட்டிகள் கொண்ட டீ 20 தொடரை பாக்கிஸ்தான் அணி தற்போதைய நிலையிலேயே 2 – 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

டீ 20 தொடரை

டீ 20 தொடரை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com