இலங்கை தேயிலை சந்தையை ரஷ்யாவில் கைப்பற்ற கென்யா முயற்சி

0
23

இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தற்காலிகத் தடையை விதித்துள்ள நிலையில், அந்தச் சந்தையைக் கைப்பற்றும் முயற்சியில் கென்யா இறங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைப் பொதியில் வண்டு இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கடந்த 18ஆம் திகதி முதல், இலங்கைத் தேயிலையை இறக்குமதி செய்வதற்கு ரஷ்யா தடை விதித்துள்ளது.

இந்நிலையில், ரஷ்யாவுக்கான தேயிலைச் சந்தையில் இலங்கைக்குப் போட்டியாக உள்ள கென்யா, இந்த வெற்றிடத்தை நிரப்பும் முயற்சியில் கடுமையாக இறங்கியுள்ளது.

கென்யாவின் விவசாய அமைச்சின் அமைச்சரவைச் செயலாளர் தலைமையிலான குழுவொன்று, இது குறித்து பேச்சுவார்த்தையொன்றில் ஈடுபட அடுத்த மாதமளவில் மொஸ்கோவுக்குப் பயணமாகவுள்ளது.

அடுத்த மூன்று ஆண்டுகளில் ரஷ்யாவுக்கான தேயிலை ஏற்றுமதியை 44 மில்லியன் கிலோவாக அதிகரிக்க கென்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஷ்யாவின் தேயிலைத் தேவையில் 23 சதவீதத்தை இலங்கைத் தேயிலை நிரப்பி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement