இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கை

0
24
இலங்கை தமிழரசுக் கட்சியின் கட்டமைப்பை மாற்றியமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ள கட்சியின் உயர்மட்டம் பணிகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை உள்ளுர், பிராந்தியம் மற்றும் சர்வதேச செயன்முறைகளுக்கு ஏற்ப கட்சியின் செயற்பாட்டை மாற்றியமைக்கவேண்டிய நிலையிலேயே இந்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமாகாணசபையை தமிழரசுக்கட்சியின் முக்கிய பங்களிப்புடன் தமிழ் தேசிய கூட்டமை கைப்பற்றி அரசியல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்ற போதும், பொருளாதார அபிவிருத்தி மற்றும் மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பு விடயங்களில் மாகாணசபை தோல்விக்கண்டுள்ளதாக பலரும் குற்றம் சுமத்துகின்றனர்.இலங்கை
எனவே, தமிழ் மக்களின் அரசியல் உரிமைகளுக்காக செயற்படும் அதேநேரம் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கும் செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படவுள்ளன.
அத்துடன், வடமாகாணசபையின் அடுத்த தேர்தலை எதிர்கொள்ளும் நோக்கிலும் தமிழரசுக் கட்சியின் மறுசீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.