இலங்கை கிரிக்கெட்டில் ஆட்ட நிர்ணயச் சதி? மைதானத்தில் நேற்று பதற்றம்

0
222

இலங்கை அணி நேற்றைய தினம் இந்திய அணிக்கு எதிரான ஒரு போட்டியில் படு தோல்வியடைந்த காரணத்தால் ரசிகர்கள் இலங்கை அணி வீரர்களுக்கு கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளதோடு ஆர்பாட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட்டில்

நேற்றைய போட்டி நிறைவைத் தொடர்ந்து தம்புள்ளை மைதானத்தை முற்றுகையிட்ட இலங்கை அணியின் ரசிகர்கள் இலங்கை வீரர்களுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பதற்ற சூழலை ஏற்படுத்தியுள்ளனர்.
இதன் காரணமாக பொலிஸார் வரவழைக்கப்பட்டு இந்திய அணி வீரர்களை பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற போதும் இலங்கை வீரர்களை மைதானத்தை விட்டுச் செல்ல ஆர்ப்பாட்டகாரர்கள் அனுமதியளிக்கவில்லை.

இலங்கை கிரிக்கெட்டில்

இலங்கை கிரிக்கெட்டில் அரசியல் காணப்படுவதாகவும் ஆட்ட நிர்ணயச் சதி இடம்பெற்று வருவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்புகளை வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்தும் நீண்ட நேரமாக பதற்ற சூழல் வலுவடைந்தால் சம்பவ இடத்துக்குஇ இலங்கை கலகத் தடுப்பு பொலிஸார் வரவழைக்கப்பட்டு இலங்கை வீரர்களை பாதுகாப்பாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும் இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலுக்கும் சென்று இலங்கை கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments