இலங்கை , இந்தியா மற்றும் பங்களாதேஷில் இருந்து ஐ.எஸ் இயக்கத்திற்கு ஆள்சேர்ப்பு

0
38
இலங்கை, பங்களாதேஸ் இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் இயக்கத்துக்கான ஆள்சேர்ப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புதிய ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக இந்தியாவின் பி.ரீ.ஐ. இணையத்தளம் தெரிவித்துள்ளது.
பேஸ்புக் மற்றும் ஏனைய சமுக வலைத்தளங்களின் ஊடாக நபர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களை மூளைச்சலவைக்கு உட்படுத்தி, இயக்கத்தில் இணைத்துக் கொள்ளும் நடவடிக்கைகளை தீவிரவாதிகள் முன்னெடுக்கின்றனர்.
இவ்வாறு இலங்கை உள்ளிட்ட நாடுகளில் இருந்து சேர்த்துக் கொள்ளப்படுகின்றவர்கள், பெரும்பாலும் தற்கொலைத் தாக்குதல்களை நடத்துவதற்காக பயன்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement