இலங்கை இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு: வியட்னாம் பிரதமர் புகழாரம்

0
127

இலங்கை இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நாடு என்று வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக் இலங்கைக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

வியாட்னாமுக்கு மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டு சென்றுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக்கும் இன்று காலை ஹனோயில் உள்ள வியட்னாம் ஜனாதிபதி மாளிகையில் இருதரப்புச் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது இலங்கைக்கும் வியட்னாமுக்கும் இடையில் பெற்றோலிய எண்ணெய் மற்றும் எரிவாயு, உட்கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், ஆடைகள், விவசாயம் மற்றும் மீன்பிடி, புதுப்பிக்கத்தக்க சக்தி, விமான சேவைகள், கல்வி, சுற்றுலா போன்ற துறைகளில் உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பான உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டது.

இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட பின்னர் இருநாட்டு பிரதமர்களும் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்தனர்.

இதன்போது கருத்து வெளியிட்ட வியட்னாம் பிரதமர் நுயென் சுவான் புக்,

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வியட்னாம் பயணத்தின் மூலம், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளில் புதிய அத்தியாயம் ஆரம்பமாகியுள்ளது.

இலங்கையுடன் கொண்டுள்ள உறவை நாங்கள் மதிக்கின்றோம். இந்தியப் பெருங்கடலில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள சக்தி வாய்ந்த நாடாக இலங்கை காணப்படுகிறது என்றார்.


இங்கு கருத்து வெளியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

இரண்டு நாடுகளும் மோசமான யுத்தங்களை சந்தித்த நாடுகளாகும். தற்போது, அபிவிருத்திப் பாதையில் செல்கின்றன. நடுத்தர வருமானமுள்ள நாடுகளாக முன்னேறியுள்ளன.

வியட்னாமிடம் பாடங்களைக் கற்றுக் கொண்டு இலங்கையை அபிவிருத்தி செய்வது தற்போதைய அரசாங்கத்தின் எண்ணமாகும். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் வகையில், வியட்னாம் பிரதமரை இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளேன் என்றார்.

இலங்கை இந்தியப்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments