இலங்கை அணியை பந்தாடிய ரோஹித் சர்மா

0
381

இலங்கை அணியை பந்தாடிய ரோஹித் சர்மா

ரோஹித் சர்மா

இந்தியா சென்றுள்ள இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 3 இருபதுக்கு இருபது போட்டியில் விளையாடவுள்ளது.

ஒருநாள் போட்டியில் முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி வெற்றியீட்டியது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 50 ஓவரின் முடிவில் 392 ஓட்டங்களைப் பெற்று 4 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியில் ரோஹித் சர்மா இலங்கை அணியின் பந்துவீச்சை துவசம் செய்தார். இவர் இறுதிவரை ஆட்டமிழகாது 208 ஓட்டங்களை 153 பந்துகளில் பெற்றார். இதில 12 சிக்ஸர்கள் மற்றும் 13 நான்கு ஓட்டங்களும் அடங்கும்.

தவான் 68 ஓட்டங்களையும், ஐயர் 88 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர். பந்துவீச்சில் திசார பெரேரா 80 ஓட்டங்களைக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

பெர்னாண்டோ 10 ஓவர் பந்து வீசி 106 ஓட்டங்களை தாரைவார்த்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com