இலங்கை அணியின் பந்துவீச்சை துவசம் செய்த ரோஹித் சர்மா

இலங்கை இந்திய அணிகள் மோதும் இரண்டாவது இருபதுக்கு இருபது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணியின் கேப்டன் திசார பெரேரா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 20 ஓவர்களின் முடிவில் 260 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்தது.

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா இலங்கை அணியின் பந்துவீச்சை துவசம் செய்தார். அவர் 43 பந்துகளில் 118 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இதில் 10 சிக்ஸர்களும் 14 நான்கு ஓட்டங்களும் அடங்கும். கே.எல். ராகுல் 89 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தார்.

இந்த ஒரு இன்னிங்சில் மொத்தம் 21 சிக்சர்கள் மற்றும் 21 நான்கு ஓட்டங்களும் விளாசப்பட்டுள்ளது.

பந்துவீச்சில் திசார பெரேரா மற்றும் பெர்னாண்டோ தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement