இலங்கையை வைட்வாஷ் செய்த இந்திய அணி

0
600

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ‘இந்திய அணி’யின் தலைவர் ரோகித் சர்மா பந்து வீச்சைத் தேர்வு செய்தார்.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி ஆரம்பம் முதலே ரன் குவிக்கத் திணறியது.

இலங்கை அணி 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 135 ஓட்டங்களைக் குவித்தது.

இலங்கை அணி சார்பில் குணரட்ன 36 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சாணக்க 29 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் உனத்காத் மற்றும் பந்த்யா தலா இரண்டு விக்கெட்டுக்களைக் கைப்பற்றினர்.

136 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 19.2 ஓவரில் 139 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது

இந்திய அணி சார்பில் மனீஷ் பாண்டி 32 ஓட்டங்களையும் ஐயர் 30 ஒட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Advertisement