இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப ஐ.நா. உறுதிபூணும்

0
34

இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப ஐ.நா. உறுதிபூணும் என்று இலங்கைக்கான ஐ.நாவின் வதிவிட பிரதிநிதி உனா மெக்குலே தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மக்களின் காணிகளின் உரிமை தொடர்பான செயற்பாடுகள் அடையாளம் காணப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையில்

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்று வழங்கிய செவ்வியிலே அவர் மேலும் கூறியுள்ளதாவது,

வடக்கு, கிழக்கில் தனியாரின் காணிகள் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட வேண்டியது அவசியம். அவ்வாறு காணிகளை மீள வழங்க முடியாவிடின் காணி உரிமையாளர்களுக்கு நட்டஈடு வழங்கப்படவேண்டும் என்பதுதான் ஐக்கிய நாடுகள் சபையின் நிலைப்பாடு.

நல்லிணக்கச் செயற்பாடுகளை அடையாளம் காணும் விடயத்தில் இலங்கை அரசாங்கத்துடன் ஐக்கிய நாடுகள் சபை செயற்பட்டு வருகின்றது. அந்த வகையில் நல்லிணக்கச்செயற்பாடுகளில் காணிகளை விடுவிக்கும் காரணியானது மிகவும் முக்கியமானது.

சமூகங்களுக்கு மத்தியில் நம்பிக்கையை கட்டியெழுப்புவதில் இந்த காரணி முக்கிய பங்காற்றும். இலங்கையில் சமூகங்களுக்கு இடையில் நம்பிக்கையை கட்டியெழுப்ப ஐ.நா. தொடர்ந்து உறுதிபூணும் என்றும் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com