இலங்கையின் விவசாய உற்பத்தி 50% வீழ்ச்சி – ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன (பட இணைப்பு)

0
24

Maithripala Sirisenaஇலங்கையில் கடந்த கால வறட்சி காரணமாக பல குளங்களில் நீர் வற்றிப் போன நிலையில் விவசாய உற்பத்தியில் 50% வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகவும் இதன் காரணமாக வெளிநாடுகளிலிருந்து அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அனுராதபுரம் மாவட்டம் கெக்கிறாவ பிரதேசத்தில் இன்ற வெள்ளிக்கிழமை  “தேசிய உணவு உற்பத்தி புரட்சி வாரம்” வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“கால நிலை மாற்றத்தினால் சிக்கலுக்கு உட்பட்டுள்ள உணவு உற்பத்திற்கு புத்துயிர் கொடுத்து அதனை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு, பேதங்களை மறந்து அனைத்து தரப்பும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,” என்று தனது உரையில் அவர் கேட்டுக் கொண்டார்.

2018ஆம் ஆண்டை தேசிய உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்துவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கின்றார்.Maithripala SirisenaMaithripala Sirisena

Maithripala Sirisena Maithripala Sirisena Maithripala Sirisena Maithripala Sirisena Maithripala Sirisena

Maithripala Sirisena

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com

Comments

comments