இலங்கையின் தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் ஆதரவு

0
68

இலங்கை தொடர்பான ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள தீர்மான வரைவுக்கு மேலும் பல நாடுகள் இணை அனுசரணை வழங்கியுள்ளன.

இலங்கை தொடர்பான தீர்மான வரைவை, அமெரிக்கா, பிரித்தானியா, மொன்ரனிக்ரோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து கடந்த 13ஆம் திகதி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்திருந்தன.

இலங்கையின் தீர்மான வரைவுக்கு

அத்துடன், இலங்கையும் இதற்கு இணை அனுசரணை வழங்குவதாக அறிவித்திருந்தது.

அதேவேளை, இந்த வரைவுக்கு ஏனைய நாடுகளையும் ஆதரவு அளிக்குமாறு அமெரிக்கா கோரியிருந்தது. இந்நிலையில், தீர்மான வரைவுக்கு ஆதரவு அளிப்பதாக, அவுஸ்ரேலியா, கனடா, ஜேர்மனி, இஸ்ரேல், ஜப்பான், நோர்வே, ஆகிய நாடுகளும் அறிவித்துள்ளன.

மேலும் பல நாடுகள் இந்த தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தீர்மான வரைவு வரும் 23ஆம் திகதி பேரவையில் விவாதிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது.

இலங்கையின் தீர்மான வரைவுக்கு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com