இலங்கையர் உட்பட 7,500 அகதிகளை நாடு கடத்துகின்றது ஆஸ்திரேலியா

0
107

இலங்கையர் உட்பட 7,500 அகதிகளை நாடு கடத்துகின்றது ஆஸ்திரேலியா அரசு.

ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள சுமார் 7 ஆயிரத்து 500 அகதிகளை வெளியேற்ற முடிவு செய்துள்ளதாக அந்த நாட்டு குடியுரிமை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை, மியான்மார், ஆப்கானிஸ்தான் நாடுகளைச் சேர்ந்தவர்கள் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.

முறையான காரணங்கள் இல்லாமல் சிலர் தங்கியிருப்பதாகவும், இவர்களால் அரசுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுவதாகவும் பல்வேறு கட்சியினர் குற்றம் சாட்டி வந்தனர்.

அகதிகளாக பதிவு செய்வதற்கு போலியான காரணங்களை வழங்கி சட்டவிரோதமாக அங்கு தங்கியிருக்கும் சுமார் 7 ஆயிரத்து 500 பேரை நாட்டை விட்டு வெளியேற்ற முடிவெடுத்துள்ளதாக குடியுரிமை அமைச்சர் பீட்டர் டட்டன் தெரிவித்துள்ளார்.

2013 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஐந்தாண்டு காலத்தில் வந்த சுமார் 50 ஆயிரம் பேரில், 20 ஆயிரம் பேருக்கு அப்போதைய தொழிலாளர் கட்சி அரசு புகலிடம் வழங்க முடிவு செய்தது.

30 ஆயிரம் பேரின் நிலை குறித்து ஐயம் எழுப்பியிருந்தது. இந்த நிலையில், அவர்களில் சுமார் 7 ஆயிரத்து 500 பேர் முறையான காரணம் இல்லாமல் அகதிகள் அந்தஸ்து பெற முயல்வதாகத் தெரியவந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கவுள்ளதாக பீட்டர் டட்டன் கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com